சிவகாசியில் சுட்டெரிக்கும் வெயில்
சிவகாசியில் சுட்டெரிக்கும் வெயிலினால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
சிவகாசி,
சிவகாசியில் சுட்டெரிக்கும் வெயிலினால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
வெயிலின் தாக்கம்
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடக்கத்தில் கோடை மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் அதிகமாக தெரியவில்ைல. ஆனால் தற்போது கோடை மழை பெய்யவில்லை. இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் காலை 11 மணிக்கு பின்னர் மாலை 4 மணி வரை சாலையில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்த அளவில் இருந்தது.
பொதுமக்கள் அவதி
அத்தியாவசிய பணிக்காக வெளியே வந்தவர்களும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் குளிர்பான கடைகளில் தஞ்சம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தலையில் தொப்பி, துப்பட்டா போன்றவற்றை அணிந்தப்படி சென்றனர். நடந்து சென்ற பலர் கையில் குடைபிடித்தப்படி சென்றனர். கந்தகபூமியான சிவகாசியில் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று வழக்கத்தைவிட அனல் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.