வாலிபருக்கு கத்திக்குத்து


வாலிபருக்கு கத்திக்குத்து
x

சீர்காழி அருகே வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார்

மயிலாடுதுறை

சீர்காழி

சீர்காழி அருகே உள்ள புளிச்சங்காடு கிராமம் கீழத் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் (வயது 32). இவர் நேற்று வீட்டின் அருகில் உள்ள பம்புசெட்டில் குளிப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கட்டப்பட்டிருந்த மாடு ஒன்று ராஜ்குமாரை முட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராஜ்குமாருக்கும், அந்த மாட்டின் உரிமையாளரான உறவினர் ராஜசேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜசேகர் மகன் ராஜேஷ் என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து ராஜ்குமாரை கத்தியால் குத்திவிட்டு ஓடி விட்டார். இதில், படுகாயமடைந்த ராஜ்குமாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சீர்காழி போலீசார், ராஜேஷ் மற்றும் அவரது தந்தை ராஜசேகா் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.









Next Story