இலக்கியங்களின் இயல்பை பாமர மக்களுக்கு புரிய வைப்பது திரை இசைபாடலாசிரியர் சினேகன் பேச்சு


இலக்கியங்களின் இயல்பை பாமர மக்களுக்கு புரிய வைப்பது திரை இசைபாடலாசிரியர் சினேகன் பேச்சு
x

இலக்கியங்களின் இயல்பை பாமர மக்களுக்கு புரிய வைப்பது திரை இசை என்று திரைப்பட பாடலாசிரியர் சினேகன் கூறினார்.

தஞ்சாவூர்

இலக்கியங்களின் இயல்பை பாமர மக்களுக்கு புரிய வைப்பது திரை இசை என்று திரைப்பட பாடலாசிரியர் சினேகன் கூறினார்.

திரை இசை

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். இதில் திரைப்பட பாடலாசிரியர் சினேகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நம் இலக்கியங்களின் இயல்பை பாமர மக்களுக்கும் புரியவைப்பதே திரை இசையின் வழியாகத்தான். இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர், சந்தம் மற்றும் ஓசைநயம் ஆகியவற்றை திரை இசையின் மூலம் எளிமையாக கற்க முடியும்.

பல்கலைக்கழகம் வாய்ப்பளித்தால் திரைப்படப் பாடல்கள் இயற்றுவது எப்படி என்பது குறித்து மாணவர்களிடம் உரையாடுவதற்கு தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

400 மாணவர்கள் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பதிவாளர்(பொறுப்பு) தியாகராசன், மொழிப்புல முதன்மையர் கவிதா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், இலக்கியத்துறை பேராசிரியருமான இளையாப்பிள்ளை வரவேற்றார். இதன் நோக்கம் குறித்து இலக்கியத்துறை தலைவர் தேவி பேசினார்.

முடிவில் இலக்கியத்துறை பேராசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார். முனைவர் பட்ட ஆய்வாளர் மஞ்சு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.


Next Story