விண்ணப்பங்கள் பதிவு முகாமை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


விண்ணப்பங்கள் பதிவு முகாமை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு முகாமை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

கந்திலி ஊராட்சி ஒன்றியம் கெஜல்நாயக்கன்பட்டி, தோக்கியம் ஊராட்சி மன்ற அலுவலகங்கள் மற்றும் புதுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நடந்தது. இந்த முகாம்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளர் ரா.நந்தகோபால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் பானு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரு, விநாயகம், ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி சரவணன், சாந்தசீலன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story