விவசாயிக்கு அரிவாள் வெட்டு


விவசாயிக்கு அரிவாள் வெட்டு
x

பாப்பிரெட்டிப்பட்டி அருகே விவசாயை அரிவாளால் வெட்ட முயன்றனர்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தொம்பகாலனூரை சேர்ந்தவர்கள் ராமலிங்கம் (வயது 49). அய்யாவு, அழகேசன். அண்ணன் தம்பிகள். அய்யாவுக்கும், ராமலிங்கத்திற்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் பொது வழிபாதையை ஓரத்தில் உள்ள நிலத்தை உழுதது குறித்து ராமலிங்கம், அழகேசன் ஆகியோர், அய்யாவுவிடம் கேட்டுள்ளனர். அப்போது, அவர்களை அய்யாவு, அவரது மகன் சபரிவாசன் (21) ஆகிய 2 பேரும் அரிவாளால் வெட்ட முயன்றனர். இதை தடுத்தபோது ராமலிங்கத்திற்கு தலை மீது அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அய்யாவு, அவரது மகன் சபரீசன் ஆகிய 2 பேர் மீதும் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story