விவசாயிக்கு அரிவாள் வெட்டு


விவசாயிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 23 Feb 2023 6:45 PM GMT (Updated: 23 Feb 2023 6:46 PM GMT)

சொத்து பிரச்சினை காரணமாக விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

சிவகங்கை

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே உள்ள சின்னாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 60) விவசாயி. இவர் கோனாப்பட்டி பால்பண்ணையில் பால் ஊற்றிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த வெள்ளைக்குட்டி மகன் மகாலிங்கம் (35) சொத்து பிரச்சினை காரணமாக அய்யாக்கண்ணுவை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அய்யாக்கண்ணு துவரங்குறிச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் புழுதிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மகாலிங்கத்தை தேடி வருகின்றனர்.


Next Story