வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு


வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு
x

வாழப்பாடி அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 3 பேரை அரிவாள் வெட்டி விட்டு காரில் தப்பிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்

வாழப்பாடி

சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). இவர் பெத்தநாயக்கன்பாளைய துணை வட்டார வளர்ச்சி அலுவலராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு 11 மணி அளவில் ஆறுமுகம், வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் தனது உறவினரின் பேக்கரியில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு கும்பல் காரில் வந்தது. அவர்கள் திடீரென ஆறுமுகம் மற்றும் அங்கிருந்தவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். மேலும் மிளகாய் பொடியை தூவி, செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினர். அரிவாளால் வெட்டியதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் மற்றும் ஜனார்த்தனன், லட்சுமணன் ஆகியோர் காயமடைந்தனர். தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலரை அரிவாளால் வெட்ட காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காரில் தப்பிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். வாழப்பாடி அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story