டாஸ்மாக் பாரில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு


டாஸ்மாக் பாரில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு
x

பாளையங்கோட்டையில் டாஸ்மாக் பாரில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அருகே பாளையஞ்செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 29). இவர் நேற்று பாளையங்கோட்டை மார்க்கெட் அருகில் உள்ள டாஸ்மாக் பாரில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த மாரிராஜ் (29) என்பவரை கிருஷ்ணகுமார் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற திம்மராஜபுரத்தைச் சேர்ந்த மாயாண்டி என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அப்போது கிருஷ்ணகுமாருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த 3 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story