ஒருவருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது


ஒருவருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது
x

ஒருவருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே பிடாரிக்காட்டை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 42). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பழனியப்பன் என்கிற சந்திரபோஸ் என்பவருக்கும் அப்பகுதியில் உள்ள இடத்திற்கு முள்வேலி போடுவதில் தகராறு ஏற்பட்டது. அப்போது சந்திரபோஸ் தரப்பை சேர்ந்த ரெத்தினம் (55), சிவசங்கர் (55) ஆகிய 2 பேரும் சேர்ந்து அரிவாளால் கிருஷ்ணமூர்த்தியை வெட்டினர். இதையடுத்து படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெத்தினம், சிவசங்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story