பள்ளி பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு


பள்ளி பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 26 Jun 2023 1:55 AM IST (Updated: 26 Jun 2023 5:53 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது

திருச்சி

சோமரசம்பேட்டை:

சோமரசம்பேட்டையை அடுத்துள்ள பொம்மணி சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்(வயது 27). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வாசன் நகர் அருகே பள்ளி பஸ்சை ஓட்டி சென்றபோது அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரது மகன் செல்வகுமார்(33) என்பவர், சுந்தரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வாசன்நகர் அருகே ஒரு மளிகை கடை முன்பு நின்ற சுந்தரிடம், செல்வகுமார் தகராறு செய்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுந்தரை வெட்டிவிட்டு தப்பிச்சென்றார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story