இலங்கை அகதிக்கு அரிவாள் வெட்டு


இலங்கை அகதிக்கு அரிவாள் வெட்டு
x

மேலூர் அருகே இலங்கை அகதிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

மதுரை

மேலூர்,

மேலூர் அருகே திருவாதவூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசிக்கும் பாலன் என்பவரது மகன் அறிவுராஜா (வயது 37). பெயிண்டராக வேலை பார்க்கும் இவர் மோட்டார் சைக்கிளில் மதுரை ரோட்டில் சென்றுள்ளார். அப்போது முக்கம்பட்டி அருகே அவரை வழிமறித்த 2 மர்ம நபர்கள் அறிவுராஜாவை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். அப்போது அந்த வழியே வந்தவர்கள் படுகாயமடைந்த அறிவுராஜாவை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story