டிரைவருக்கு அரிவாள் வெட்டு


டிரைவருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே காத்திருப்பு கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரகலாதன் (வயது 36). லாரி டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் என்பவருக்கும் இடையே இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. காத்திருப்பு இரட்டை வாய்க்கால் அருகில் அரசு புறம்போக்கு இடத்தை பிரகலாதன் வேலி வைத்து பயன்படுத்தி வந்துள்ளார். நேற்று மணிமாறன் அந்த இடத்தில் இருந்த வேலியை அகற்றி கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் மணிமாறன், அவரது மகன் அருண் மணிமாறன், மணிமாறன் தம்பி அப்பு என்கிற சிற்றரசன், உறவினர் வீரமணி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து பிரகலாதனை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாகசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story