உப்பளத் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
ஆத்தூர் அருகே உப்பளத் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைதுசெய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த சுடலை பாண்டியன் மகன் மகாலிங்கம் (வயது 58). உப்பள தொழிலாளி. இவர் பழைய காயல் பகுதியில் உப்பளத்தில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும், பழையகாயல் ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த வேல்சாமி மகன் செல்வம்(21), அவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சுடலைமணி மகன் ராஜேஷ்(22) ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மகாலிங்கம் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு வந்த செல்வமும், ராஜேசும் வழிமறித்து தகராறு செய்துள்ளனர். திடீரென்று அரிவாளால் மகாலிங்கத்தை வெட்டிவிட்டு 2 பேரும் தப்பி ஓடிவிட்டனராம். காயமடைந்த மகாலிங்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து சலெ்வம், ராஜேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
கைதான செல்வம் மீது ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.