தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு


தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
x

தொழிலாளியை அரிவாளால் வெட்டினர்.

விருதுநகர்

சிவகாசி,

சாத்தூர் அருகே உள்ள நத்தத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளை (வயது 45). இவரும் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரும் மரம் வெட்டும் வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெருமாள் மரம் வெட்ட செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து காளை, பெருமாளிடம் ஏன் வேலைக்கு வர வில்லை என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த பெருமாள், காளையை அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த காளை சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காளை கொடுத்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story