தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; 3 பேர் கைது


தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; 3 பேர் கைது
x

நெல்லையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை முன்னீர்பள்ளம் மருதம்நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 47). தொழிலாளி. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் மேலப்பாளையம் கருங்குளத்தை சேர்ந்த முருகன் மகன் வெங்கடேஷ் (28), முத்தையா மகன் அன்பு (24) உள்ளிட்டவர்கள் அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நேற்று அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த தளவாய் மகன் இசக்கிமுத்து (21) என்பவரையும் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.


Next Story