தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு


தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
x

நெல்லையில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு துவரை ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கும், இவருடன் வேலை செய்யும் 2 சிறுவர்களுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு லோடு ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக அந்த சிறுவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் அய்யப்பனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story