டிரைவரை அரிவாளால்வெட்டி வழிப்பறி


டிரைவரை அரிவாளால்வெட்டி வழிப்பறி
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மெஞ்ஞானபுரம் அருகே டிரைவரை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்த மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம அருகே உள்ள கல்விளை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் இசக்கிபாண்டி (வயது 30). இவர் திருச்செந்தூரில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலையில் லாரியில் ஜல்லிகற்கள் ஏற்றுவதற்காக சாத்தான்குளம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது நங்கைமொழி அருகே உள்ள தனியார் பள்ளி அருகில் லாரியை நிறுத்திவிட்டு சிறிதுநேரம் ஓய்வு எடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த 3பேர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தர மறுத்த அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர் அவரிடமிருந்து ரூ.600 மற்றும் செல்போனை பறித்து கொண்டுதப்பி சென்று விட்டனர்.இதில் படுகாயமடைந்த அவர் திருச்செந்தூர் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story