தமிழக கவர்னரை மாற்றக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பேரணி


தமிழக கவர்னரை மாற்றக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பேரணி
x
தினத்தந்தி 5 Jun 2022 2:13 AM IST (Updated: 5 Jun 2022 2:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மாற்றக்கோரி மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பேரணி நடத்தினர்.

கவர்னரை மாற்றக்கோரி...

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடந்தது. கட்சியின் மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார்.

இதில் துணைத்தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர் முகமது அவவி, மாநில நிர்வாகிகள் ஏ.கே.கரீம், இ.முகமது ரஷீத், அசார் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

பேரணியில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, இந்திய கம்யூனிஸ்டு மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் முகமது சேக் அன்சாரி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டம்

கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே தொடங்கிய இந்த பேரணி ஐந்து பர்லாங் சாலை அருகே நிறைவடைந்தது. பேரணியின் நிறைவில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக 'கெட் கவுட் கவர்னர்' என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

மாவட்டந்தோறும் போராட்டம்

முன்னதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களிடம் கூறுகையில், ''7 பேர் விடுதலை, நீட் உள்பட தமிழக அமைச்சரவையின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் இழுத்தடிக்கிறார். பேரறிவாளன் விடுதலையில் சுப்ரீம்கோர்ட்டு வைத்த 'குட்டு' காரணமாக திணறிப்போன அவர், அதை திசைதிருப்புவதற்காக சிறுபான்மையினர் இயக்கங்களை தேசவிரோத அமைப்புகள் என பழிபோடுகிறார்.

மாநில அரசை மதிக்காமல், இந்துத்துவ கொள்கைகளையே பிரசாரம் செய்துவரும் அவரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இல்லையேல் மாவட்டந்தோறும் இதுபோல 'கெட் அவுட் கவர்னர்' என்ற போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்'', என்றார்.

Live Updates

  • 5 Jun 2022 2:16 AM IST


    நேட்டோ பாதுகாப்பு கூட்டணியில் சேர்ந்து பாதுகாப்பு தேடும் உக்ரைனின் முயற்சிக்கு எதிராக ரஷியா அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தப் போர் 100 நாட்களைத்தாண்டி தொடர்கிறது.

    இந்தப் போரில், அந்த நாட்டின் 20 சதவீத பகுதிகளை ரஷியா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

    கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. டான்பாஸ் பகுதியில் வான்தாக்குதல்களை ரஷிய படையினர் அதிகரித்து வருவதாக இங்கிலாந்து ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.


Next Story