எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் யாசர்கான் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளார் சிக்கந்தர், மாவட்ட துணைத்தலைவர் செய்யது மஹ்மூத், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் திவான் ஒலி, மாவட்ட செயலாளர் நூர் முஹம்மது, மாவட்ட பொருளாளர் கல்வத் கனி, வேளாண் அணி மாவட்ட செயலாளர் முஹம்மது காசிம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முஹம்மது கனி, முஹம்மது அலி, முத்துமுஹம்மது, சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் ஹக்கீம், எஸ்.டி.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அசன் கனி, மாவட்ட பொருளாளர் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாநில பொதுச்செயலாளர்கள் நிஜாம் முஹைதீன், அஹமது நவ்வி, வர்த்தக அணி மாநில பொதுச்செயலாளர் ஜாபர் அலி உஸ்மானி, நெல்லை மண்டல தலைவர் சுல்பிகர் அலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ராஜபாளையம் முதல் தென்காசி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story