எஸ்.டி.பி.ஐ. கட்சி உறுப்பினர் சேர்க்கை
சங்கரன்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 14-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு அனைத்து செயல் வீரர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் அபுதாஹிர் தலைமை தாங்கினார். 20-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஷேக் முகம்மது, நகர துணைத்தலைவர் முருகன், நகர பொருளாளர் பீர்மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இணைச்செயலாளர் அப்துல் நசீர் சிறப்புரையாற்றினார்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஹக்கீம் சேட், அப்துல் காதர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்கள். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்றது.
முடிவில் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் உசேன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story