எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நூதன போராட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினார்கள்.
நாகர்கோவில்:
மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினார்கள்.
பெட்ரோல்- டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும், மாதம்தோறும் கட்டண மின் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், வீடு மற்றும் நிலவரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள அண்ணா சிலை அருகே நூதன போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல் ஜாபர் வரவேற்று பேசினார். மாவட்ட பொது செயலாளர் மணவை சாதிக் அலி, நெல்லை மண்டல தலைவர் சுல்பிகர் அலி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கையில் விளக்குகளை ஏந்தி நூதன முறையில் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன.