எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மேலப்பாளையத்தில் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
மேலப்பாளையம்:
நெல்லை மாநகர் மாவட்ட எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், பழைய 44 தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சுல்தான் பாஷா தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் முகம்மது ஆசாத், மண்டல தலைவர் ஹைதர்அலி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கனி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இதில் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story