படகில் அடிபட்டு கடல் பசு இறந்ததா?


படகில் அடிபட்டு கடல் பசு இறந்ததா?
x

ராமேசுவரம் அருகே படகில் அடிபட்டு கடல் பசு இறந்ததா? என்று வனத்துறையினர் சோதனையிட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தியில் கடல் பசு, டால்பின், நட்சத்திர மீன்கள், சுறா உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. இதில் அரிய வகை கடல் வாழ் உயிரினமாக கடல் பசு உள்ளது. தற்போது கடல் பசுவின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது. எனவே அவை முற்றிலும் அழிந்துவிடாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. மீனவர்களுக்கும் இதுசம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம் கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு, அடிபட்டு இறந்த கடல் பசு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று விசாரித்தனர். சுமார் 5 அடி நீளம் 300 கிலோ எடை கொண்ட அந்த கடல் பசுவின் உடலை பரிசோதனை செய்து புதைத்தனர். ஆழ்கடல் பகுதியில் பெரிய மீன்பிடி படகு அல்லது கப்பலில் அடிபட்டு இந்த கடல் பசு இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Related Tags :
Next Story