கடல் அட்டைகளை கடத்தியவர் கைது


கடல் அட்டைகளை கடத்தியவர் கைது
x

மீமிசல் அருகே கடல் அட்டைகளை கடத்தியவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

வனத்துறை அதிகாரிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே முத்துக்குடா கடல் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கடல் அட்டைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், அறந்தாங்கி வனத்துறை சரக அலுவலர் மேகலா, வனவர்கள் அந்தோணிசாமி, அன்புமணி, சோனமுத்து, வேட்டை தடுப்பு காவலர்கள் முத்துராமன், சைமன் உள்ளிட்ட அதிகாரிகள் முத்துக்குடா கடல் பகுதியில் ஆய்வு செய்தனர்.

6 கடல் அட்டைகள் பறிமுதல்

அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த அரசனகரிபட்டினத்தை சேர்ந்த செய்யது அலி (வயது 40) என்பவரை பிடித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் விற்பனைக்காக 6 கடல் அட்டைகளை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து செய்யதுஅலியை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் கடல் கட்டைகளையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story