வங்கக்கடல் மீன்பிடி தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்


வங்கக்கடல் மீன்பிடி தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் வங்கக்கடல் மீன்பிடி தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்

நாகப்பட்டினம்


நாகையில் வங்கக்கடல் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தேசிய மீனவர் பேரவை துணைத்தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நமது நாட்டின் கடலோர மண்டலத்தின் வளங்களை பாதுகாக்கவும், அதனை மேம்படுத்தவும் கடந்த 1986-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் கடலோர ஒழுங்குமுறை சட்டம் உருவாக்கப்பட்டது. இதில் உயர் அலை கோட்டிலிருந்து 500 மீட்டர் வரையிலான கடற்கரை நிலங்களும், அங்குள்ள சிற்றோடைகள், தடாகங்கள், முகத்துவாரங்கள் மற்றும் மணல் திட்டுகள், கடல்சார் பூங்காக்கள், சரணாலயங்கள், காப்புக்காடுகள், வனவிலங்குகளின் வாழ்விடங்கள் எவை? என்பது குறித்து கடலோர ஒழுங்குமுறை சட்ட அறிவிப்பாணை மூலம் வரைபடம் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இந்த வரைபட திட்டத்தில் தமிழ்நாட்டின் கடலோர பகுதியில் இருந்த பல மீனவ கிராமங்கள் மாயமாகியுள்ளது. கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை வெளியிட்ட புதிய வரைபடத்தில் நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், ஆரியநாட்டுத்தெரு, புஷ்பவனம், விழுந்தமாவடி உள்ளிட்ட கிராமங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது ஏற்புடையது இல்லை என்றார். எனவே கடற்கரை ஒழுங்கு முறை சட்ட மேலாண்மை வரைபடத்தை மாற்றியமைக்க மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்றார். கூட்டத்தில் பல்வேறு மீனவ அமைப்பு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story