கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம்


கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம்
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாக இயக்கப்பட்டது.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்,

கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாக இயக்கப்பட்டது.

கடல் சீற்றம்

கன்னியாகுமரியில் நேற்றுமுன்தினம் மதியம் முதல் கடல் சீற்றமாக இருந்தது. இதனால் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

2-வது நாளான நேற்றும் கடல் சீற்றமாகவும், கடலின் நீர்மட்டம் தாழ்வாகவும் இருந்தது. இதனால் காலை 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்க வேண்டிய படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை. எனவே படகில் செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

படகு போக்குவரத்து தாமதம்

பின்னர் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 9.15 மணிக்கு தாமதமாக படகு போக்கு வரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் படகில் ஏறி சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு ரசித்தனர்.

அதே சமயத்தில் திருவள்ளுவர் சிலை பகுதிக்கு இயக்கப்படவில்லை. நீர்மட்டம் அந்த பகுதியில் தொடர்ந்து தாழ்வாக இருந்ததால் படகை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டது. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு படகில் சென்று காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


Next Story