வேதாரண்யம் பகுதியில் கடல் 100 அடி தூரம் உள் வாங்கியது


வேதாரண்யம் பகுதியில் கடல் 100 அடி தூரம் உள் வாங்கியது
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாண்டஸ் புயல் அபாயம் காரணமாக வேதாரண்யம் பகுதியில் கடல் 100 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது.

நாகப்பட்டினம்

மாண்டஸ் புயல் அபாயம் காரணமாக வேதாரண்யம் பகுதியில் கடல் 100 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது.

கடல் உள்வாங்கியது

வங்க கடலில் மாண்டஸ் புயல் உருவாகி உள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று கடல் சீற்றமாக காணப்பட்டது. மேலும் 100 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. கடலில் 3 அடி உயரத்துக்கு அலைகள் சீறி எழுந்ததையும் காண முடிந்தது. கடல் பரப்பில் பனி மூட்டாக காட்சி அளித்தது.

வேதாரண்யம், ஆயக்காரன்புலம், வாய்மேடு, கரியாப்பட்டினம், தலைஞாயிறு, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடும் பனிப்பொழிவு இருந்தது. சாரல் மழையும் பெய்தது.

வெறிச்சோடிய கடைவீதி

மீன்வளத்துறை அறிவுறுத்தியதன்பேரில் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடும் பனிப்பொழிவு மற்றும் சாரல் மழை காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.


Next Story