354 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கல்; கடைக்கு அதிகாரிகள் சீல்


354 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கல்; கடைக்கு அதிகாரிகள் சீல்
x

354 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கிய கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மதுரை

பேரையூர்,

மதுரை டி.ஐ.ஜி. பொன்னியின் சிறப்பு தனிப்பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பேரையூர் முக்கு சாலையில் உள்ள குளிர்பான கடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 354 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் சம்சுதீன் (வயது 53) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் அறிவுரையின் பேரில், பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சரோஜா, துணை தாசில்தார் கருப்பையா, பேரையூர் இன்ஸ்பெக்டர் காந்தி, டி.கல்லுப்பட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலையில் புகையிலை குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.


Next Story