புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு 'சீல்' வைப்பு


புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல் வைப்பு
x

புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள நொச்சிகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன்‌ (வயது 45), மாரியப்பன் (57). இவர்களது கடைகளில் சீவலப்பேரி போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சங்கரலிங்கம் ஆகியோர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது 2 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 2 பேர் கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு துறையினர் தற்காலிகமாக 'சீல்' வைத்தனர். மேலும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story