தனியார் ஓட்டலுக்கு 'சீல்' வைப்பு
மயிலாடுதுறை நகராட்சிக்கு வரி செலுத்தாததால் தனியார் ஓட்டலுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை நகராட்சிக்கு சொத்து வரி உள்ளிட்ட வரிகள் செலுத்தாமல் நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.எந்தவித பதிலும் இல்லாத அதிக அளவில் தொகை வரிபாக்கி வைத்துள்ள நிறுவனங்கள் மீது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் மயிலாடுதுறை காமராஜ் பஸ் நிலையம் எதிரே உள்ள பயன்பாட்டின்றி பூட்டிகிடந்த விடுதியுடன் கூடிய தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு நகராட்சி மேலாளர் நந்தகுமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் பிரபாகரன், சிங்காரவேலு, தினகரன் பாலசுந்தரம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் சொத்து வரி நிலுவைத் தொகையினை செலுத்தாத காரணத்தினால் இக்கட்டிடம் ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்க உத்தேசம் செய்யப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.
Related Tags :
Next Story