வங்கி கடன் செலுத்தாத தொழிலாளி வீட்டிற்கு 'சீல்' வைப்பு


வங்கி கடன் செலுத்தாத தொழிலாளி வீட்டிற்கு சீல் வைப்பு
x

வங்கி கடன் செலுத்தாத தொழிலாளி வீட்டிற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை அருகே பழைய பேட்டை சர்தார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 45). கூலித்தொழிலாளியான இவர் வீடு கட்டுவதற்கு நெல்லையில் உள்ள தனியார் வங்கியில் ரூ.4 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடன் தொகையை அவர் சரியாக கட்டாத காரணத்தால் வங்கியில் இருந்து பலமுறை அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் அவர் பணத்தை கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று கோர்ட்டு உத்தரவின் பேரில் நாகராஜன் வீட்டிற்கு வங்கி ஊழியர்கள் 'சீல்' வைத்தனர்.


Next Story