தொழில் அதிபரிடம் முன்பணம் பெற்று எழுதி கொடுக்கப்படாத வீட்டுக்கு 'சீல்'


தொழில் அதிபரிடம் முன்பணம் பெற்று எழுதி கொடுக்கப்படாத வீட்டுக்கு சீல்
x

நித்திரவிளை அருேக தொழில் அதிபரிடம் முன்பணம் ெபற்று எழுதி கொடுக்காத வீட்டுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருேக தொழில் அதிபரிடம் முன்பணம் ெபற்று எழுதி கொடுக்காத வீட்டுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

வீட்டை விற்க முன்பணம்

நித்திரவிளை அருகே உள்ள விரிவிளை பகுதியை சேர்ந்தவர் புஷ்பலீலா (வயது 67). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு டார்வின் என்ற மகனும் ஜூடி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், புஷ்பலீலா தனது மகனுடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் டார்வின் படிப்பு தேவைக்காக ஏற்பட்ட கடனுக்காக தனது வீடு இருக்கும் சொத்தை ரூ.6 லட்சத்திற்கு விற்க விலை பேசியுள்ளார். இதற்காக கடந்த 2007-ம் ஆண்டு கடையாலுமூடு பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் கலீல் என்பவரிடம் சொத்து ஆவணங்களை கொடுத்து முன்பணமாக ரூ.4 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், கலீலுக்கு சொத்தை பத்திரபதிவு செய்து கொடுக்காமல் நாட்களை கடத்தி வந்தனர்.

கோர்ட்டில் வழக்கு

இதனையடுத்து கலீல் குழித்துறை கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வந்தபோது புஷ்பலீலா தரப்பில் யாரும் முறையாக ஆஜராகவில்லை என தெரிகிறது. இதையடுத்து கலீல் சொத்துக்கு உரிமைபட்டவர்களுக்கு சேரவேண்டிய மீதி தொகை ரூ.2 லட்சத்தை கோர்ட்டில் கட்டினார். தொடர்ந்து கோர்ட்டு சொத்தை கலீல் பெயரில் பதிவு செய்து கொடுத்தது.

இதனையடுத்து அந்த இடத்தை ஜப்தி செய்து கலீலிடம் வழங்க கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. நேற்று கோர்ட்டு அதிகாரிகள், ஊழியர்கள் நித்திரவிளை போலீசாரின் உதவியுடன் புஷ்பலீலா வீட்டுக்கு சென்றனர். வீட்டில் புஷ்பலீலாவும், அவரது மருமகளும், மருமகளின் தாயாரும் இருந்தனர். டார்வின் வெளியூரில் வேலைக்கு சென்றிருந்தார்.

வீட்டுக்கு 'சீல்'

தொடர்ந்து அதிகாரிகள் வீட்டில் இருந்த பொருட்களையும், வீட்டில் இருந்தவர்களையும் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கு புஷ்பலீலாவும் அவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் வீட்டுக்குள் அமர்ந்த நிலையில் வெளியேற மறுத்து தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

அவர்களிடம் ேபாலீசார் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டை விட்டு வெளியேற்றினர். பின்னர் அதிகாரிகள் வீட்டை பூட்டி 'சீல்' வைத்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story