அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்துக்கு 'சீல்'


அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்துக்கு சீல்
x

கோத்தகிரி அருகே அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்துக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில் கலெக்டர் அம்ரித் ஆய்வு மேற்கொள்ள சென்ற போது, 2 தளங்களுடன் கட்டப்படும் கட்டிடத்தை பார்த்தார். இந்த கட்டிடம் கட்ட அனுமதி பெறப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதைெதாடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 2 தளங்களுடன் கூடிய கட்டிடம் கட்ட தூண்கள் அமைத்ததும், தற்போது முடிவடையும் நிலையில் பணிகள் நடந்ததும் தெரியவந்தது. மேலும் கட்டிடம் கட்ட மாவட்டம் நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை. இதையடுத்து கலெக்டர் கட்டிடத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.

இந்தநிலையில் நேற்று கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், ெஜயபால், கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு வரும் கட்டிடத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் கட்டிட பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்று உரிமையாளருக்கு அறிவுறுத்தினர்.


Next Story