நகராட்சி சமுதாய கூடத்திற்கு 'சீல்'
கம்பத்தில் குத்தகையை தொகை செலுத்ததால் நகராட்சி சமுதாய கூடத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
கம்பம் நகராட்சிக்கு சொந்தமாக உத்தமபுரம், ஆங்கூர்பாளையம், தாத்தப்பன்குளம் பகுதியில் சமுதாயக்கூடங்கள் உள்ளன. இந்த சமுதாயக்கூடங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில் கம்பம் ஆங்கூர்பாளையம் சாலையில் உள்ள சமுதாய கூடத்திற்கு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையினை குத்தகைதாரர் செலுத்தாமல் இருந்து உள்ளார். நகராட்சி சார்பில் கால அவகாசம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதன்பின்பும் குத்தகை தொகையை செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் உத்தரவின் பேரில், நகராட்சி வருவாய் ராமசாமி, கட்டிட ஆய்வாளர் சலீம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேற்று அந்த சமுதாய கூடத்தை பூட்டி 'சீல்' வைத்தனர்.
மேலும் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை மற்றும் குத்தகை தொகையினை செலுத்த தவறினால், அந்த கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.