தனியார் மதுபாருக்கு 'சீல்'


தனியார் மதுபாருக்கு சீல்
x
தினத்தந்தி 3 Aug 2023 1:15 AM IST (Updated: 3 Aug 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

நத்தத்தில் தனியார் மதுபாருக்கு ‘சீல்’ வைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

திண்டுக்கல்

நத்தத்தில் தனியார் கிளப் மதுபான பார் உள்ளது. அது தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி சட்டத்தின் கீழ் எப்.எல்.2 உரிமம் பெற்று செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அங்கு உரிம நிபந்தனைகளை மீறி மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கலெக்டர் பூங்கொடி உத்தரவின்பேரில், தனியார் மதுபாரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கலால்துறை அதிகாரிகள் மதுபான பாரை பூட்டி 'சீல்' வைத்தனர்.


Related Tags :
Next Story