ரூ.1 கோடி வாடகை பாக்கி; 3 கடைகளுக்கு `சீல்'
வாடகை பாக்கி தராத 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
சிவகங்கை
காரைக்குடி,
காரைக்குடி கல்லுப்பட்டி மேற்கு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதில் சிவகங்கை மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டகசாலை சார்பில் பல் பொருள் அங்காடி மருந்தகம் உள்ளிட்ட 3 கடைகள் செயல்பட்டு வந்தன. நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை கட்டணத்தை கடைக்காரர்கள் பல ஆண்டுகளாக செலுத்தவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் வாடகை பாக்கி ரூ.1 கோடிக்கு மேல் உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை கட்டணத்தை செலுத்தவில்லையாம். இதையடுத்து நகராட்சி ஆணையாளர் லெட்சுமணன் உத்தரவின் பேரின் நகராட்சி அதிகாரிகள் அந்த 3 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.
Related Tags :
Next Story