அரசுக்கு மாதாந்திர தொகை செலுத்தாத, அனுமதி பெறாத டாஸ்மாக் கூடங்களுக்கு `சீல்'


அரசுக்கு மாதாந்திர தொகை செலுத்தாத, அனுமதி பெறாத டாஸ்மாக் கூடங்களுக்கு `சீல்
x

அரசுக்கு மாதாந்திர தொகை செலுத்தாத, அனுமதி பெறாத டாஸ்மாக் கூடங்களுக்கு `சீல்' வைக்கப்பட்டது.

அரியலூர்

திருச்சி முதுநிலை மண்டல மேலாளர் உத்தரவின் பேரில், பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அரசுக்கு மாதாந்திர தொகை செலுத்தாத அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் கூடங்களையும் (பார்), அரசு அனுமதி பெறாமல் நடைபெறும் டாஸ்மாக் கூடங்களையும் பூட்டி சீல் வைக்குமாறு ஒருங்கிணைந்த பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்பேரில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கூடமும், குன்னம், பெருமத்தூர் ஆகிய கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கூடங்களும், அரியலூர் மாவட்டத்தில், அரியலூர், செந்துறை, சிறுகளத்தூர், ஆனந்தவாடி, கட்டையங்குடி காடு ஆகிய கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கூடங்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.


Next Story