புகையிலை பொருட்கள் விற்ற டீக்கடைக்கு 'சீல்'


புகையிலை பொருட்கள் விற்ற டீக்கடைக்கு சீல்
x

புகையிலை பொருட்கள் விற்ற டீக்கடைக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் தேவேந்திரன் என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவர் தனது டீக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் தலைமையில், அலுவலர்கள் சின்னமுத்து, இளங்கோவன், ரவி ஆகியோர் நேற்று அந்த டீக்கடைக்கு திடீரென்று சென்று ஆய்வு நடத்தினர். அப்போது கடையில் விற்பனைக்காக 750 கிராம் புகையிலை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அலுவலர்கள் அந்த டீக்கடைக்கு 'சீல்' வைத்து, உணவு பாதுகாப்பு பதிவு சான்றினை ரத்து செய்தனர். ஏற்கனவே அந்த டீக்கடைக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததற்காக ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story