உரிமம் இல்லாமல் செயல்பட்ட கல்குவாரிக்கு சீல்
உரிமம் இல்லாமல் செயல்பட்ட கல்குவாரிக்கு சீல் வைக்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் அருகே செங்குன்றாபுரத்தில் செயல்பட்டு வந்த கல்குவாரியை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்தது. அப்போது அந்த கல் குவாரியின் உரிமம் கடந்த 2022 ஜனவரியோடு முடிந்து விட்ட நிலையில் உரிமம் இல்லாமல் கல்குவாரி செயல்பட்டது தெரியவந்தது. அதன் பேரில் கல்குவாரியில் இருந்த எந்திரங்களையும், வாகனங்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டதோடு கல்குவாரிக்கு சீல் வைக்கவும், மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன் பேரில் விருதுநகர் தாசில்தார் பாஸ்கரன் குவாரியில் இருந்த வாகனங்களையும், எந்திரங்களையும் கைப்பற்றியதோடு கல்குவாரிக்கும் சீல் வைத்தார்.
Related Tags :
Next Story