அ.தி.மு.க.வினர் தங்கி இருந்ததாக கூறி ஈரோட்டில் தனியார் திருமண மண்டபத்துக்கு 'சீல்
ஈரோட்டில், அரியலூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் தங்கி இருந்ததாக கூறி, தனியார் திருமண மண்டபத்துக்கு தேர்தல் அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. திருமண மண்டபம், உள் அரங்கம், பணிமனை போன்றவற்றில் தங்கவும், கூட்டம் நடத்தவும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க.வினரில் பெரும்பாலானவர்கள் விடுதி, காட்டேஜ், தனியார் வாடகை வீடுகள், காலியாக உள்ள கட்டிடங்களை பேசி தங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் காலை 11 மணிக்கு ஈரோடு ஜீவா நகரில் உள்ள ஒரு தணியார் திருமண மண்டபத்தில் அரியலூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் தங்கி, தேர்தல் பணி செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் தனியார் மண்டபத்திற்கு சீல் வைத்தனர்.
Related Tags :
Next Story