வரி செலுத்தாத 2 வணிக நிறுவனங்களுக்கு 'சீல்' வைப்பு


வரி செலுத்தாத 2 வணிக நிறுவனங்களுக்கு சீல் வைப்பு
x

நெல்லையில் வரி செலுத்தாத 2 வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் மாநகர பகுதிகளில் வரி செலுத்தாத குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து வரி வசூல் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் மாநகர பகுதியில் நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாத 2 வணிக நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. அதேபோல் 3 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.


Next Story