தூத்துக்குடியில் உரிமம் இன்றி இயங்கிய 2 குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கு 'சீல் வைப்பு'


தூத்துக்குடியில் உரிமம் இன்றி இயங்கிய 2 குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் உரிமம் இன்றி இயங்கிய 2 குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி உரிமம் இல்லாமல் குடிநீர் விற்பனை செய்த 2 நிறுவனங்களுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

குடிநீர் விற்பனை

கோடைகாலத்தை முன்னிட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் உறிஞ்சப்படுவதாக வந்த புகாரின் பேரில் ஆணையாளர் தினேஷ்குமார் நேற்று காலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வி.வி.டி.சிக்னல் அருகேயும், டூவிபுரம் 1-வது தெருவிலும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை ஆய்வு செய்த போது, நிலத்தடி நீரை உறிஞ்சி, அதனை சுத்திகரித்து குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. அதே நேரத்தில் எந்தவித உரிமமும் இன்றி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டது தெரியவந்தது.

'சீல்' வைப்பு

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து உரிய உரிமம் இன்றி செயல்பட்ட 2 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story