அனுமதியின்றி செயல்பட்ட எலும்பு முறிவு சிகிச்சை மையத்துக்கு சீல்
நாட்டறம்பள்ளி அருகே அரசு அனுமதியின்றி செயல்பட்ட எலும்பு முறிவு சிகிச்சை மையத்துக்கு சுகாதாரத் துறையினர் சீல் வைத்தனர்.
நாட்டறம்பள்ளி அருகே அரசு அனுமதியின்றி செயல்பட்ட எலும்பு முறிவு சிகிச்சை மையத்துக்கு சுகாதாரத் துறையினர் சீல் வைத்தனர்.
எலும்பு முறிவு சிகிச்சை மையம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட வெலக்கல்நத்தம் பகுதியில் கிருஷ்ணகிரி- வேலூர் தேசிய நெடுஞ்சாலை அருகே தமிழக அரசு அனுமதி இன்றி புத்தூர் கட்டு என்னும் எழும்பு முறிவு சிகிச்சை மையம் செயல்படுவதாக முதல்-அமைச்சரின் தனி பிரிவுக்கு புகார் மனு சென்றது.
அதன்பேரில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து தலைமையில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, வெலக்கல்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ராமன், அரசு மருத்துவர் செல்வகுமார், கிராம நிர்வாக அலுவலர் சிவன் உள்ளிட்ட வருவாய்த் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் திடிரென சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
சீல் வைப்பு
அப்போது நாட்றம்பள்ளி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட சந்திரபுரம் கே.கே.கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 45) என்பவர் தமிழக அரசு அனுமதியின்றி புத்தூர் கட்டு என்ற பெயரில் எழும்பு முறிவுக்கு மருத்துவம் செய்வது தெரியவந்தது.
இதனையெடுத்து சுகாதாரத் துறையினர், தமிழக அரசு அனுமதி இன்றி மருத்துவமனை நடத்தக்கூடாது என தெரிவித்து அந்த சிகிச்சை மையத்துக்கு சீல் வைத்தனர்.