உரிமம் இல்லாமல் இயங்கிய பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு சீல் வைப்பு


உரிமம் இல்லாமல் இயங்கிய பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு சீல் வைப்பு
x

தலைவாசல் அருகே உரிமம் இல்லாமல் இயங்கிய பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

சேலம்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் பகுதியில் உரிமம் இல்லாமல் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வீரகனூர் கிராம நிர்வாக அலுவலர் கலியமூர்த்தி அளித்த புகாரின்பேரில் சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, வேல்முருகன், தாசில்தார் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, கடந்த ஒரு வருடமாக உரிமம் இல்லாமல் அந்த பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், அதன் உரிமையாளர் தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story