வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல்


வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல்
x

திருப்பத்தூரில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் எதிரில், கிருஷ்ணகிரி மெயின் ரோடு, வாணியம்பாடி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. இந்த கடைகளை ஏலம் எடுத்தவர்கள் மாதந்தோறும் நகராட்சிக்கு வாடகை கட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு நோட்டீஸ் மூலமும் நேரடியாகவும் சென்று நகராட்சி ஊழியர்கள் வாடகை பணத்தை செலுத்த கோரி இருந்தனர. பலமுறை வாடகை கேட்டும் தராத கடைகளை பூட்டி சீல் வைக்க நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

அதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா தலைமையில் வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் வாடகை கட்டாத நகராட்சி கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

இதேபோன்று குடிநீர் வரி கட்டாத வீடுகள் மற்றும் கடைகளுக்கு நேரில் சென்று குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கூறுகையில், வரி மற்றும் வாடகை மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு திருப்பத்தூர் நகராட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுகிறது. ஆகையால் பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் வாடகை பாக்கிகளை செலுத்தி நகராட்சிக்கு உதவ வேண்டும் என்றார்.


Next Story