புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்


புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்
x

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை

கீரனூர், உடையாளிப்பட்டி பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சண்முகசுந்தரம் (வயது 37), செல்வம் (63), முகமது இப்ராகிம் (31), பன்னீர்செல்வம் (65), முருகன் (53), பெரியசாமி (53) ஆகியோர் தங்களது கடைகளில் புகையிலை பொருட்களை விற்றதாக தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். மேலும் குன்றாண்டார்கோவில் நால்ரோடு பகுதியில் கடையில் சண்முகசுந்தரம் தொடர்ந்து புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததால் அவரது கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


Next Story