கடலில் அமைப்பதற்கு பதிலாக மதுரையில் கட்டிவரும் கலைஞர் நூலகத்தில் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைக்கலாம்-சீமான் பேட்டி
கடலில் அமைப்பதற்கு பதிலாக, மதுரையில் கட்டிவரும் கலைஞர் நூலகத்தில் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைக்கலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
கடலில் அமைப்பதற்கு பதிலாக, மதுரையில் கட்டிவரும் கலைஞர் நூலகத்தில் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைக்கலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சீமான் பேட்டி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமானின் உடன்பிறந்த சகோதரியான அன்பரசியின் மகள் கயல்விழிக்கு சிவகங்கையில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில் சீமான் பங்கேற்று வாழ்த்தினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
மதுரை கலைஞர் நூலகம்
கடல் என்பது கட்சிக்கு சொந்தமானதல்ல. அது பொது சொத்து. பேனா சின்னம் குறித்த எனது கருத்துக்கு, பதில் கருத்தாக அமைச்சர் சேகர்பாபு உரிமையோடு என்னை திட்டுகிறார். அவர் பேசியது பழைய டயலாக். அவருக்கே, கடலில் பேனா சின்னம் அமைப்பது தவறான செயல் என தெரியும்.
கடலுக்குள் சின்னம் வேண்டாம் என்று நான், முதல்-அமைச்சரிடம் கேட்கிறேன், அப்படி கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் வைக்க வேண்டும் என்றால் அண்ணா அறிவாலயத்திலோ, அண்ணா நூலகத்திலோ அல்லது மதுரையில் கட்டிவரும் கலைஞர் நூலகத்திலோ அமைத்துக்கொள்ளலாம்.
அ.தி.மு.க. விவகாரம்
ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் உறுதியாக வெல்வோம். இலங்கையில் இருந்து அகதிகள் தமிழகம் வருவது என்பது, இன்னும் அங்கு தமிழர்கள் வாழ முடியாத சூழலையே காட்டுகிறது. இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழர்கள் வருவதை தடுக்க ஒரே வழி தனி ஈழம் அமைவதுதான்.
மக்களவைக்கு ஓராண்டில் தேர்தல் வருவதால், மத்திய பட்ெஜட்டை வாசித்து சென்றிருக்கிறார்கள். அதனை கேட்டு சிரித்துச் செல்ல வேண்டும். அதனால் ஒரு பயனும் இருக்காது. அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சினை பற்றி கருத்து கூற இயலாது.
இவ்வாறு அவர் கூறினார்.