விளாத்திகுளம் அருகே மக்களை தேடி மருத்துவம் திட்டம்
விளாத்திகுளம் அருகே மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ ஆய்வுச செய்தார்.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள கருப்பூர் கிராம மக்களுடன் நடை பயிற்சி மேற்கொண்ட மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஆய்வு செய்தார். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனளிகளை சந்தித்த அவர், திட்டம் குறித்து விளக்கி கூறினார். மேலும் கருப்பூர் கிராமத்தில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை பராமரித்து பொதுமக்களின் பயன்பாட்டை கொண்டு வருமாறு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார். சாலையோர பகுதிகளில் மரக்கன்றுகள் நடவும், அருணாசலபுரம் ஊராட்சியை வேலியில்லா ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கெளரிதுரை, மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகி ராகவன், மாசார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story