பழனி முருகன் கோவிலில் பொது தரிசன பக்தர்களுக்கு இருக்கை வசதி


பழனி முருகன் கோவிலில் பொது தரிசன பக்தர்களுக்கு இருக்கை வசதி
x
தினத்தந்தி 26 July 2023 3:00 AM IST (Updated: 26 July 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் பொது தரிசன பக்தர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவிலில் பொது தரிசன பக்தர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தரிசன வழிகள்

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் பொது தரிசனம், ரூ.10 மற்றும் ரூ.100 கட்டண தரிசனத்தில் சென்று சாமியை வழிபடுகின்றனர். ரூ.100 கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் தங்களுக்கான தரிசன நேரம் வரும் வரை காத்திருக்கும் அறையில் அமர்ந்து தரிசனத்திற்கு செல்கின்றனர். காத்திருக்கும் அறையில் இருக்கைகள், எல்.இ.டி. டிவி, மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.

அதேபோல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.10 கட்டண தரிசனத்தில் செல்லும் வழியிலும் பக்தர்களுக்கு காத்திருப்பு அறையில் 1,000 இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அதனால் முதியவர்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இருக்கை வசதி

இந்தநிலையில் பொதுதரிசன பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் இருக்கை வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நாயக்கர் மண்டபத்தில் 210 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுதரிசன வரிசையில் வரும் பக்தர்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை இனி இல்லை. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story