வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி


வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
x

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

அரியலூர்

தா.பழூர்:

தா.பழூர் ஒன்றியத்தில் தென்கச்சிபெருமாள்நத்தம் ஊராட்சியின் 4-வது வார்டு உறுப்பினர் மற்றும் சாத்தம்பாடி ஊராட்சியின் 7-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடி பணியாளர்கள் ஆகியோருக்கான இரண்டாம் கட்ட பயிற்சி தா.பழூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் வாக்குச்சாவடிகளை தயார் செய்தல், வாக்குச்சாவடிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், ஆவணங்கள் பராமரிப்பு, வாக்குப்பெட்டி பாதுகாப்பு, வாக்குச்சாவடி முகவர்களுக்கான உரிமைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் வாக்குப்பெட்டி தயார் செய்தல், முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவுக்கு முன்பு வாக்குப்பெட்டியை முத்திரையிட்டு பூட்டுதல், வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டியை பாதுகாப்பான முறையில் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் பூட்டி முத்திரையிடுதல் ஆகியவை குறித்தும் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) ராஜேந்திரன் பயிற்சி அளித்தார். தேர்தல் உதவியாளர் அபிமன்யு பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்.


Next Story